ஆத்துப்பட்டி காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3287 days ago
வேடசந்துார், வேடசந்துார் அருகே உள்ள ஆத்துப்பட்டி காளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. தீர்த்தம் அழைத்தல், கணபதி பூஜையை தொடர்ந்து காளியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாவில், ஆத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், அகரம், தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.