உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி கோவிலில் அன்னக்குவியல் வழிபாடு

மழை வேண்டி கோவிலில் அன்னக்குவியல் வழிபாடு

பெ.நா.பாளையம்: கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை உள்ளது. இங்குள்ள தர்மராஜா கோவிலில் அன்னக்  கூடஉற்சவ திருவிழா கடந்த, 31ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி மகாபாரத விராட பருவம் பகுதி பாராயணமும், நிறைவாக அன்னக் கூட உற்சவமும் நடந்தது. விழாவையொட்டி, உற்சவமூர்த்திகளுக்கு ஸ்தபன திருமஞ்சன பூஜையும், மகா வேள்வியும்,  வருணஜப யாகமும், விஜயவகுளா பரண பட்டர் சுவாமிகள் தலைமையில் நடந்தது. கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,‘ 80 கிலோ அரிசியில் புளியோதரை, தலா , 10 கிலோ அரிசியில் தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் கேசடி சுவாமிக்கு பிரசாதமாக  படைக்கப்பட்டன. மழை வேண்டிய யாகம் நடத்தினர்’ என்றனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வெள்ளமடை திரு ஆராதனம் அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !