உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 6 மாதங்களில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 6 மாதங்களில் கும்பாபிஷேகம்

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் இன்னமும் 6 மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் அமைந்துள்ள நாறும்பூநாதசுவாமி கோயில் மிகவும் பழமையானதாகும். கோயில்கோபுரத்தில் உள்புறம் வரையப்பட்டுள்ள மூலிகை ஓவியங்கள் மிகவும் பழமையானதாகும். அந்த ஓவியங்களை புராதனம் மாறாமல் ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதனை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். நெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் முடிந்துவிட்டன. தற்போது கொடையாளர்களின் நிதி ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் கோபுரங்கள் வர்ணபூச்சு பணிகள்,கல்தளம் பழுதுபார்த்தல் பணிகள் நடந்துவருகின்றன. இன்னமும் 6 மாதங்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !