சதுர்த்தி நாயகனுக்கு நாளை சிறப்பு வழிபாடு
திருவள்ளூர்;சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் ஹோமங்கள் நடைபெறுகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள வழித்துணை விநாயகர், தீர்த்தீஸ்வரர் கோவில் வரசித்தி விநாயகர், ஆயில் மில் அருகில் உள்ள வெற்றி விநாயகர் கோவில், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர்கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் விநாயகர் சபையில், மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகமும், திருவள்ளூர், ஜெயா நகர் விஸ்தரிப்பில் மகா வல்லப கணபதிக்கு மாலையில், கணபதி ஹோமம், அபிஷேகம் நடைபெறும்.இரவு, 7:30 மணிக்கு பிரார்த்தனை தேங்காய் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும்.சோழவரம் அடுத்த, பஞ்சேஷ்டி ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில் காரிய சித்தி கணபதி சன்னதியில் சங்கட நிவாரண ஹோமம், 1,008 மூலமந்திர ஹோமம், ககார ஸகஸ்ரநாமஅர்ச்சனை விசேஷ அபிஷேக அலங்காரம் நடைபெறும்.