காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.46 லட்சம்
ADDED :2957 days ago
காஞ்சிபுரம்;காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, 46.44 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக செல்வர். அவரவர் வேண்டுதலுக்காக காணிக்கை செலுத்துவர். அந்த உண்டியல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.அந்த வகையில், நேற்று காலை கோவில் உள்ள உண்டியல்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் விஜயன், ஸ்ரீகாரியம் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.அதில், 46, லட்சத்து,44 ஆயிரத்து, 679 ரூபாயும்,தங்கம், 277 கிராம், வெள்ளி, 334 கிராம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வருவாயாக கிடைத்தன.