உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில் கும்பாபிஷேகம் தூத்துக்குடிக்கு இன்று விடுமுறை

சிவன் கோயில் கும்பாபிஷேகம் தூத்துக்குடிக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி, தூத்துக்குடி சிவன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. தூத்துக்குடி நகரில் அமைத்துள்ள பாகம்பிரியாள் சங்கர ராமேஸ்வரர் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3.30 மணியளவில் நான்காம் கால யாகசாலை வேள்வி பூஜை தொடங்கி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம் கடம் புறப்படுதல் நடைபெறுகிறது. காலை 6.45 மணியளவில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்பங்கள் புறப்பாடும், தொடர்ந்து விமானங்களுக்கும், ராஜகோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், மூலவர் பாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவில் சுவாமி,அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் பங்கேற்கும் வகையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !