உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்சியம்மன் கோவிலில் 19 முதல் நவராத்திரி பூஜை

ஆட்சியம்மன் கோவிலில் 19 முதல் நவராத்திரி பூஜை

கொடுமுடி: ஆட்சியம்மன் கோவிலில், 19 முதல் நவராத்திரி பூஜை தொடங்குகிறது.கொடுமுடி, ஏமகண்டனூரில், ஆட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, சாரதா நவராத்திரி பூஜை, வரும், 19ல் துவங்கி, 30 வரை நடக்கிறது. செப்.,19 முதல், நாள்தோறும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, மாலையில், 5:30 மணி முதல், இரவு, 8:00 வரை சிறப்பு பூஜை நடக்கும். செப்.,30ல் மஹா சண்டி ஹோமத்துடன் விழா முடிகிறது. பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, ஏவல், பில்லி சூனியம், திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்கும். மாணவர்கள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்களும் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !