உலகநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2952 days ago
திருப்புத்துார், திருப்புத்துார் அருகே நெய்வாசலில் உலகநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி செப்.6ம் தேதி காலையில் யாகசாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கின. நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை துவங்கி, தொடர்ந்து கோ பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் கோபுர,விமானங்களுக்கு சென்றனர். காலை 9:45 மணிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் உலகநாயகியம்மனுக்கு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.