மகாளய பட்சம் சிறப்பு நிகழ்ச்சி
திருப்பூர் : மகாளய பட்சத்தின் போது, முன்னோர்களை வழிபட்டு நன்மைகள் பெறும் வகையில், திருப்பூரில் வரும், 10ல், சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இறந்த முன்னோர்களை, அவர்கள் இறந்த திதியின் படி, வழிபாடு செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. பெரும்பாலானவர்கள், திதி தினத்தன்று பித்ரு வழிபாடுகளை செய்யாமல், ஆடி அமாவாசை, தை அமாவாசை என, குறிப்பிட்ட தினங்களில், முக்கிய நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து வழிபடுகின்றனர். ஆவணி அல்லது புரட்டாசியில் வரும், மகாளயபட்சம் என்பது மிகவும் முக்கியமானது. இந்தாண்டு, செப்., 6 முதல், 19ம் தேதி வரை மகாளயபட்ச நாட்களாகும். மறைந்த நம் முன்னோர்களுக்கு, இந்நாட்களில் தர்ப்பணம் செய்து வழிபடுவது, வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும் என்பது நியதி. இதையடுத்து, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், வரும், 10ம் தேதி, சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம், 2:00 முதல் நடக்கும் நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த பிரபல ஜோதிடர் ராஜகோபால், நன்னிலம் ராஜகோபால கனபாடிகள் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். மேலும் விவரங்களுக்கு, 99439 12677 ; 98422 70087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.