இடைப்பாடி சக்திகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :2952 days ago
இடைப்பாடி: சக்திகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது. சேலம், பூலாம்பட்டி, குப்பனூரில் உள்ள சக்திகாளியம்மன் கோவில் கும்பாபி?ஷகத்தையொட்டி, கடந்த, 6ல், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று, காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வந்த புனிதநீரை, சிவாச்சாரியார்கள் கோபுர கலசம் மீது ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில், பூலாம்பட்டி, குப்பனூர், கூடக்கல், இடைப்பாடி, அம்மாபேட்டை, நெருஞ்சிபேட்டை பகுதிகளில் இருந்து, 5,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.