விநாயகர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த வீரல்பட்டி மாகாளியம்மன், சித்தி விநாயகர் கோவில், நுாதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, கடந்த, 6ம் தேதி, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ேஹாமம், பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம், வேதிகார்ச்சனை, வேதமந்திரங்கள் ஜபம், இரண்டாம் கால ேஹாமம், சம்யோஜனம் உபசார பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாமம், மூன்றாம் கால ேஹாமம், அஷ்டபந்த மருந்து சாற்றுதல் பூஜைகள் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு பஞ்சகவ்ய பூஜை,ரக்ஷா பந்தனம், காலை, 7:45 மணிக்கு யாத்ரா தானம், காலை, 8:00 மணிக்கு சித்தி மகா கணபதி கும்பாபிஷேகம், காலை, 8:30 மணிக்கு மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகமும், காலை, 8:30 மணிக்கு மூலாலய தேவதா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை, 10:30 மணிக்கு மகாபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு தசதரிசனம் நடந்தது.