அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3008 days ago
நாமக்கல்: பரளியில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மோகனூர் அடுத்த, பரளியில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 6ல் கணபதி யாகம், தொடர்ந்து அம்மனுக்கு அபி ஷேகம் செய்ய, காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கடந்த, 7ல் விநாயகர் பூஜை, சிறப்பு யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 7:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், மக்கள் செய்திருந்தனர்.