நல்ல பாதை எது?
ADDED :3008 days ago
நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரிடம்,ஒருவர் தன் திறமையை நல்ல வழியில் பயன்படுத்துகிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? என்று கேட்டனர். அதற்கு அவர், ஒருவர் தமது பச்சிளங்குழந்தையின் தேவைக்காகவும், பெற்றோருக்கு பணிவிடை செய்யவும், தன்னுடைய தேவையை பூர்த்தி செய்ய நெறி கெட்ட வழியைத் தவிர்த்து வேறு எதில் ஈடுபட்டாலும், அவர் தன் திறமையை நல்ல வழியில் பயன்படுத்துவதுடன், இறைவழியில் நடக்கிறார் என்று பொருள். பெருமைக்காகவும், புகழுக்காவும் பயன்படுத்தினால் அவர் சைத்தானின் பாதையில் செல்கிறார் என்று பொருள், என்றார்.