உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டில் கும்பாபிஷேகம்: 7 சிறுமிகளை கன்னிமார்களாக வழிபாடு

வத்தலக்குண்டில் கும்பாபிஷேகம்: 7 சிறுமிகளை கன்னிமார்களாக வழிபாடு

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே நடந்த கும்பாபிஷேகத்தில் 7 சிறுமிகளை கன்னிமார்களாக நினைத்து வழிபட்டனர். கருப்பமூப்பன்பட்டியில் வாலகுருநாதசாமி கோயில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பூர்ணாகுதி, சந்தியாவந்தனம், அங்குரார்ப்பணம், கோ பூஜை, லட்சுமி பூஜைகள் நடந்தன. வேதபாராயணங்கள் பாடப்பட்டது. நேற்று சப்தகன்னிமார் பூஜைகளுடன் விழா துவங்கியது. 7 சிறுமிகள் மஞ்சள் பாவாடை, சட்டை அணிந்து சன்னதி முன்பாக அமர வைத்து, கிராமத்தினர் சிறுமிகளை சப்த கன்னிமார்களாக நினைத்து வழிபட்டனர். முன்பாக சிறுமிகள் விரதம் கடைபிடித்தனர். தொடர்ந்து புனித நீர் கலசங்கள் நாதஸ்வர, மேளத்துடன் கோயிலை வலம் வந்தது. பின், சிவாச்சாரியம் மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் நடந்தது.  திருமங்கலம், எஸ்.பி.நத்தம் முத்துகிருஷ்ணன் ஸ்தபதி சிலைகளை வடிவமைத்தார். போடி சோமாஸ்கந்தன், விஸ்வநாத சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !