உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் விழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கோவில் விழா: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி : கோவில் விழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.சி.பள்ளி கிராமத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை, கரகாட்டம், சுவாமி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.காலை, 9:00 மணிக்கு, எருதின் தலை மீது தேங்காய் உடைத்தல், செம்மறி ஆட்டின் தலை மீது தேங்காய் உடைத்தல், பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது, தேங்காய்கள் உடைக்கப்பட்டன. 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !