வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3006 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, மேலசிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் பின்புறம், புதிதாக கட்டப்பட்ட யோக வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல சிந்தலவாடியில், யோக நரசிம்மர் கோவில் பின்புறம், யோக வலம்புரி விநாயகர் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழா, முதல் யாக பூஜையுடன், நேற்று முன்தினம் மாலை துவங்கியது. கோவில் கோபுர கலசத்திக்கு, நேற்று காலை புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. லாலாப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.