உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, புணவாசிப்பட்டி அருகே, நரசிங்கபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டது. கடந்த, 8ல், காவிரியில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம் துவங்கியது. இரண்டாம் கால யாக பூஜையுடன், காலை கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர். முத்துரத்தின குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !