மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED :2946 days ago
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டு மருதூர் காலனி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கிராம மக்கள் மருதூர் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மேட்டு மருதூர் செல்லாண்டியம்மன் கோவில், மாரியம்மன்கோவில், அங்காளபரமேஸ்வரி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் செய்து, காலனியில் முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. பூஜை முடிவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.