உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி அம்மன் கோயில் டங்கா காளைக்கு ஓய்வு

மீனாட்சி அம்மன் கோயில் டங்கா காளைக்கு ஓய்வு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகள் இறைபணிகளில் ஈடுபட்டு வந்த டங்கா காளை(பாண்டி) வயது முதிர்வால் நேற்றுமுன்தினம் பணி ஓய்வு அளிக்கப்பட்டது. இக்கோயிலில் தினமும் காலையில், அம்மன் மற்றும் சுவாமி அபிேஷகத்திற்கு வைகை ஆற்றில் இருந்து திருமஞ்சன நீர் கொண்டு வரும் பணியில் ஆரம்பித்து பள்ளியறை பூஜை வரை இறைப்பணியை இது தொடர்ந்து 21 வயதாகும் இந்த காளை 2001ம் ஆண்டு முதல் கோயில் திருவிழாக்களிலும், சுவாமி ஊர்வலங்களிலும் நகரா(முரசு) அடித்துக் கொண்டு வரும். இக்காளையின் ஓய்வை தொடர்ந்து காங்கேயம் சிவன் மலை கோயிலிருந்து அழைத்து வரப்பட்ட காளையும் மற்றும் உபயதாரர் மூலம் வரப்பெற்ற தார்பாக்கர் காளையும் இனி இந்த பணியை தொடர உள்ளன. ஏற்பாடுகளை இணைகமிஷனர்நடராஜன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !