பழநி காட்டாற்று வெள்ளத்தில் பக்தர்கள் நடைபாதை சேதம்
ADDED :3004 days ago
பழநி: பழநி அருகே கணக்கன்பட்டியில் காட்டாற்று வெள்ளத்தில் பாதயாத்திரை பக்தர்களின் நடைபாதை சேதமடைந்துள்ளது. பழநிமுருகன் மலைக்கோயிலுக்கு, தைப்பூசம்,பங்குனி உத்திர திருவிழாவின்போது பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக பழநி-திண்டுக்கல் ரோட்டில் தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன் பெய்த கனமழையின்போது கணக்கன்பட்டி ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில் பாதயாத்திரை பக்தர்களின் நடைபாதை சேதமடைந்து கற்கள் பெயர்ந்துள்ளது. அதனை செப்பனிட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முன்வரவேண்டும். இதேபோல கோம்பைபட்டி ரோட்டில் வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.