தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் குரு பெயர்ச்சி மஹா யாகம்
ADDED :3062 days ago
தாரமங்கலம்: கைலாசநாதர் கோவிலில், குரு பெயர்ச்சி மஹா யாகம் நடந்தது. வாசன் முறை பஞ்சாங்கப்படி, குரு பகவான் கன்னியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்தது. இதையொட்டி, தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், நேற்று, குருபெயர்ச்சி மஹா யாகம், 108 சங்காபிஷேக பூஜை நடந்நது. ஏராளமான பக்தர்கள், நவக்கிரகங்களில் உள்ள குருபகவான், தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.