ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கரம் 2ம் நாள்: சந்தான கோபால கிருஷ்ண ஹோமம்
ADDED :2944 days ago
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் இரண்டாம் நாளில் அம்மா மண்டபம் காவிரியாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
ஸ்ரீரங்கத்தில் நடந்து வரும் காவிரி மகா புஷ்கரம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று(செப்13ல்) யாகசாலையில், சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் நடந்தது. யாகசாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஆதிநாயக பெருமாள் தாயாருடன் எழுந்தருளி சேவை சாதித்தார். அம்மா மண்டபம் காவிரியாற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.