உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சடச்சி கோயிலில் முளைப்பாரி திருவிழா

சடச்சி கோயிலில் முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம், ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் சடச்சி முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. சடச்சி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா செப்., 3 ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன், முத்து எடுக்க செல்லும் நிகழ்ச்சி நடந்தது. செப்., 5ல் அபிஷேகம், அம்மனுக்கு காப்பு கட்டுதல், முத்துபரப்புதல் நடந்தது. செப்., 8 ல் திருவிளக்கு பூஜை, ஆவணி பவுர்ணமி ஊஞ்சல் அலங்காரம் நடந்தது. செப்., 10 ல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தது. இரவு பூ அலங்காரம் நடந்தது. செப்., 12 ல் பால்குடம், பால் அபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு அலங்காரம் நடந்தது. கரகம் எடுத்தல், பாரிக்கு காப்பு கட்டுதல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. செப்., 13 ல் காலை 6:00 மணிக்கு ஊர் பொங்கல் மாலை 3:00 மணிக்கு பாரியை ஊர்வலமாக கொண்டு சென்று கங்கை சேர்த்தல், இரவு 7:00 மணிக்கு சாந்த அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !