ஆத்தூர் பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை
ADDED :3060 days ago
ஆத்தூர்: பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கைலாசநாதர் கோவில் வளாகத்தில், பிரித்தியங்கிராதேவி அம்மன், சொர்ண பைரவர் சுவாமி சிலைகள் உள்ளன. நேற்று, தேய்பிறை அஷ்டமியொட்டி, அக்கோவிலில், உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. பின், அம்மன் மற்றும் சொர்ண பைரவர், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரங்களில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆறகளூர் காநாதீஸ்வரர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.