மாரியம்மன் கோவில் திருவிழா: மாவிளக்கு ஊர்வலம்
ADDED :2945 days ago
தர்மபுரி: சவுளுப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அடுத்த சவுளுப்பட்டியில், மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ல் கொடியேற்றம் மற்றும் கங்கனம் கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூல் ஊற்றுதல், பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. கோவிலில் இருந்து துவங்கிய மாவிளக்கு ஊர்வலம், குமாரசாமிபேட்டை, நான்குரோடு, டேக்கீஸ்பேட்டை, சந்தைபேட்டை, புரோக்கர் ஆபீஸ் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், மாரியம்மன் முத்தங்கி அலங்காரத்தில் நகர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை, சவுளுப்பட்டி பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.