உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை 3ம் நாளில் பல்லாயிரகக்ணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
 
நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா புஷ்கரம் வி ழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதநீராடி வருகின்றனர்.மேலும் அவர்கள் காவிரி கரையில் வேதவிர்ப்பன்னர்கள் மூலம் தங்களது மூதாதையர்களுக்கு திதி கொ டுத்து, வழிபாடு நடத்தினர். 144 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் விழாவின் 3ம் நாளான நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி துலாக்கட்ட புஷ்கரத்தில் புனித நீராடினார்.

மகா புஷ்கரம் விழாவையொட்டி காவிரி துலாக்கட்டத்தின் வடகரையில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் தீக்ஷதர்களின் வேதபாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காவிரி வடகரையில் ஸ்ரீ அன்னபூரனேஸ்வரி சமேத அன்னபூரனேஸ்வர் சுவாமியை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோம் நடைபெற்றது. தொடர்ந்து தீக்ஷதர்கள் வேத மந்தரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து அன்னப்பூரணி அ ம்பாள் காவிரிகரையில் எழுந்தருள, யாகத்தில் வைத்து ஆவாகனம் செய்யப்பட்ட புனிதநீரை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமானோ ர் காவிரியில் புனித நீராடினர். தீர்த்தவாரியில் பாஜ. எம்பி., இல.கணேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக காவிரி துலாக்கட்ட புஷ்கரத்தில் தமிழக துணி, நூல் துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன், பாஜ, எம்பி., இல.கணேசன் ஆகியோர் உறவினர்களுடன் புனித நீராடினர். மகா பு ஷ்கரம் விழாவையொட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று மாலை வரை துலாக்கட்ட புஷ்கரத்தில் 2 லட்சம் பக்தர்கள் புனிதநீராடியுள்ளனர். விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பகுதியில் பாதுகாப்பிற்காக அதிக எண்ணிக்கையில் போலீசார் பணியில் ஈடுபடுத்த ப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !