உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.63.72 லட்சம்

திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.63.72 லட்சம்

திருத்தணி;திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், 15 நாட்களில் பக்தர்கள், 63.72 லட்சம் ரூபாய் ரொக்கம், 829 கிராம் தங்கம் ஆகியவை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை
தரிசித்து, காணிக்கையை உண்டியல்களில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், 15 நாட்களில் உண்டியலில் செலுத்திய பக்தர்களின் காணிக்கை, நேற்று முன்தினம், கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டன. இதில், 63.72 லட்சம் ரூபாய் ரொக்கம், 850 கிராம் தங்கம் மற்றும், 4,200 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !