உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களை அதிகம் ஈர்க்கும் ஒரகடம் கோதண்டராமர் கோவில்

பக்தர்களை அதிகம் ஈர்க்கும் ஒரகடம் கோதண்டராமர் கோவில்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் அருகே, கலை பொக்கிஷங்களுடன் கூடிய, கோதண்டராமர் கோவில், தினமும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. திருக்கழுக்குன்றம் அடுத்த, 4 கி.மீ.,யில் ஒரகடம் உள்ளது. இங்கு, 1,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவில் கலை அம்சம் கொண்டதாக விளங்குகிறது.பெருமாளின், 10 அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள், இங்கு செதுக்கப்பட்டுள்ளன. இதன் அருகே, இசை நிகழ்ச்சி, யாகசாலை பூஜை நடைபெறுவதற்கு தனி மண்டபமும் உள்ளது.தினமும் பூஜைக்கு மலர்கள் எடுக்க, கோவில் வளாகத்தில் நந்தவனம் உள்ளது. மேலும், தனி ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. புகழ்பெற்ற இக்கோவில் ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தை சார்ந்தது.கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.இது குறித்து, கோவில் பட்டாச்சாரியார் கூறுகையில், ’இங்கு வழிபட்டு செல்வோருக்கு திருமண தடை நீங்குகிறது. புத்திர பாக்கியம் பெறுகின்றனர். நாகதோஷத்தை நிவர்த்தி செய்யும் தனி நாகர் சன்னதி உள்ளது. வரும் மாதம் புரட்டாசி என்பதால், எந்த நாள் வந்தாலும் கூடுதல் பலன் பெறலாம்’ என்றார்.சமீப காலமாக, இந்த கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !