உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆணைவாரி அய்யனார் கோவில் வருஷாபிஷேக விழா

ஆணைவாரி அய்யனார் கோவில் வருஷாபிஷேக விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி கிராமத்தில் உள்ள ஸ்ரீபூரண, புஷ்கலா சமேத ஹரிகரபுத்ர, அய்யனார் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு, மங்கள வாத்தியம், விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ேஹாமம், கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நடந்தது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீபூரண, புஷ்கலா, ஹரிகர புத்தர சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், கோவில் வளாகத்தில் உள்ள அய்யனார், விநாயகர், பெருமாள், பிடாரியம்மன், கருப்பை, வீரனார் ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !