சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா
சென்னை : உளுந்துார்பேட்டையில் உள்ள, ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில், ௨௧ம் தேதி, நவராத்திரி விழா துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, ஸ்ரீ சாரதா ஆசிரமம்.குக்கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களின் மேம்பாடு என்ற, பிரதான நோக்குடன் செயல்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், சமூகநலன், விவசாயம், கலை, கலாசாரம், பேரிடர் மேலாண்மை போன்றவற்றை, போதிப்பதிலும் சிறந்து விளங்குகிறது.இந்த ஆசிரமம் சார்பில், ஆண்டுதோறும், நவராத்திரி மகோற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா, செப்., 21 - 29 வரை நடத்தப்படுகிறது.இதன் துவக்க விழாவில், ’தினமலர்’ நாளிதழின், துணை ஆசிரியர், கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கொலுகண்காட்சியை துவக்கி வைத்து பேசுகிறார்.விழா, 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில், பல்கலை துணைவேந்தர், நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர், யதீஸ்வரி ராமகிருஷ்ணபிரியா அம்பா செய்துள்ளார்.