உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தடிகாரன் கோவில் கும்பாபிஷேகம்

தடிகாரன் கோவில் கும்பாபிஷேகம்

தலைவாசல்: தடிகாரன், முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தலைவாசல், சிறுவாச்சூர், ஏரிக்கரையில் உள்ள தடிகாரன், முனியப்ப சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் மாலை, காப்பு, கும்ப அலங்காரங்கள் நடந்தன. சக்தி அழைப்பு நடந்து, சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று அதிகாலை, மங்கள இசை முழங்க, யாகசாலையில் இருந்து, கும்பம் ஊர்வலம் எடுத்து வரப்பட்டு, கோவிலை அடைந்தது. சிவாச்சாரியார்கள், வேதங்கள் முழங்க, கும்பாபி?ஷகம் நடத்தினர். இதையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை, தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !