மயிலத்தில் பிரதோஷ வழிபாடு
ADDED :2948 days ago
மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடந்தது. மயிலம் ஒன்றியத்திலுள்ள ஆலகிராமம், கொல்லியங்குணம், பாதிராப்புலியூர், பெரும்பாக்கம், தென்பசியார் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று வழிபாடு நடந்தது. ஆலகிராமத்திலுள்ள திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு கோவில் மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள்