தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கோபுர பணிகளை முடிக்க கோரிக்கை
இளையான்குடி: தாயமங்கலத்தில் முத்துமாரியம்மன்கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்துநேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். சாதாரண நாட்களை விட,செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாககாணப்படும். தாயமங்கலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பங்குனிமாதம் நடக்கும் பத்து நாள் திருவிழாவின் போது, தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். இந்த கோயிலில்கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக, புதிய ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. தற்போது,முடியும் தருவாயில், உள்ளது. 72 லட்சம் செலவில், இந்த கோயில்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் வேலைகளை வேகமாகமுடித்து விரைவில் கும்பாபிேஷகம் நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவிர, பக்தர்கள் செல்லும் நடைபாதையில் தற்போது,அதிக அளவில் கடைகள் போடப்பட்டுள்ளன. இந்த கடைகள்பக்தர்களுக்கு மிகுந்த சிரமத்தை தருவதாக பொதுமக்கள் புகார்அளித்து வருகின்றனர். எனவே, நடைபாதையில் உள்ள இந்தகடைகளை அப்புறப்படுத்த வேண்டும், என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.