பழமையான மண்டபம் பாதுகாக்கப்படுமா?
ADDED :2998 days ago
திருக்கழுக்குன்றம்: ஆனுார் கிராமத்தில் உள்ள, பழங்கால மண்டபம் பாதுகாக்கப்பட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் விரும்புகின்றனர். திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனுார் கிராமத்தில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டபம் உள்ளது. பாலாற்றின் ஓரத்தில், 3,500 சதுர அடியில் கலை அம்சத்துடன், கருங்கற்கள் கட்டுமானத்தில், படித்துறையுடன் கட்டப்பட்டுள்ளது.பாலாற்றில் நீர் நிறைந்து ஓடும் நேரத்தில் ஆற்றை கடந்து, ஆனுார் கிராமத்தை அடைய, இப்படித்துறை பயன்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.பல ஆண்டுகளாக, இந்த மண்டபம் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து, அதன் பெருமையை இழந்து வருகிறது.சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர், இதை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.