சதய விழா குழு தலைவர் யார்? : தஞ்சை கோவிலில் குழப்பம்
ADDED :2954 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் சதய விழா குழு தலைவர் யார் என்ற குழப்பத்தால், சதய விழாப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவிலில், ராஜராஜ சோழனின் பிறந்த தினமான ஐப்பசி, 13ம் தேதி, சதய விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக, சதய விழா குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு மாதத்திற்கு முன்பாகவே, பணிகள் துவங்கும். கடந்த ஆண்டு, தஞ்சாவூர், எம்.எல்.ஏ., ரங்கசாமி, சதய விழாக் குழு தலைவராக இருந்தார். இவர் தற்போது, பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளதால், நடப்பாண்டு தலைவராக யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.