உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் நாளை முதல்வர் புனித நீராடல்

மயிலாடுதுறையில் நாளை முதல்வர் புனித நீராடல்

மயிலாடுதுறை: நாகை மாவட்டம், மயிலாடுதுறை, காவிரி மகா புஷ்கரம் விழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில், 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். மயிலாடுதுறையில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய, அமைச்சர், ஓ.எஸ். மணியன் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர், பழனிசாமி, 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுகிறார். பின், நாகையில் மாலை நடைபெறும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள செல்கிறார். அமைச்சர்கள் பலர் புனித நீராட வருவர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !