உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா: 8ம் திருநாள் தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா: 8ம் திருநாள் தீர்த்தவாரி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா 8ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராராடிவருகின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு பின் காவிரி மகா புஷ்கரம் விழா 12ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மதியம் வரை 8 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் காவிரி துலாக்கட்ட புஷ்கரத்தில் புணித நீராடியுள்ளனர். 8 ம் திருநாள் மற்றும் மகாளய அமாவாசை தினமான இன்று காவிரி வட கரையில் வியாதிகள் போக்கும் தன்வந்தரி ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திக்ஷிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, அன்னபூரணி அம்பாள் காவிரி புஷ்கரத்தில் எழுந்தருள, அவருக்கு ஹோமத்தில் வைத்து ஆவாகனம் செய்யப்பட்ட புனித நீரைக்கொண்டு அபிஷேகம் செய்யப்பட தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !