உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா 24ல் துவக்கம்

கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா 24ல் துவக்கம்

ஈரோடு: ஈரோடு, கோட்டை பெருமாள் கோவில் எனப்படும் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் திருத்தேர் திருவிழா, 24ல் இரவு, 8:00 மணிக்கு கிராம சாந்தியுடன் துவங்குகிறது. மறுநாள் காலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு, 7:00 மணிக்கு அன்னபட்சி வாகன உலா நடக்கிறது; 26ல் சிம்ம வாகனம், 27ல் அனுமந்த வாகனம், 28ல் கருட சேவை, 29ல் யானை வாகன உலா, 30ல் மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் மற்றும் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது. அக்., 1ல் காலை, 7:30 மணிக்கு சுவாமி திருத்தேர் எழுந்தருளல், 9:05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. அக்.,2ல் இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனம், 3ல் சேஷ வாகனம் மற்றும் தெப்ப உற்சவம், 4ல் காலை, 6:00 மணிக்கு மகா அபி?ஷகம், இரவு, 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் வடமாலை சாற்றுதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !