உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

நரசிம்மர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

நாமக்கல்: நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற நாமகிரி தாயார், நரசிம்மர் சுவாமி கோவிலில், இன்று காலை துவங்கும் நவராத்திரி விழா, 30 வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 8:00 மணிக்கு அரங்கநாயகி தாயார், பேட்டை திருவீதி புறப்பாடு, 9:00 மணிக்கு, நாமகிரி தாயார் கோட்டை திருவீதி புறப்பாடு நடக்கும். அதேபோல், இரவு, 7:00 மணிக்கு நரசிம்மர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் சிறப்பு தீபாராதனை நடக்கும். இன்று, மச்சாவதாரம்; நாளை, கூர்மாவதாரம்; 22ல், வாமனாவதாரம்; 23ல், ரங்கமன்னார் திருக்கோலம்; 24ல், ராமாவதாரம்; 25ல், கிருஷ்ணாவதாரம்; 26ல், பரமபதநாதன் அலங்காரம்; 27ல், விசேஷ அலங்காரம்; 28ல், மோகன அவதாரம், 29ல், ராஜாங்க சேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். செப்., 30 இரவு, 7:00 மணிக்கு அரங்கநாதரும், நரசிம்மரும் கமலாலய குளக்கரையில் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவு, 7:30 மணிக்கு, மாணவ, மாணவியர் பங்கேற்கும் இன்னிசை மற்றும் வீணை, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமகிரி தாயார் மண்டபத்தில், நவராத்திரி கொலு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் கிருஷ்ணன், பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !