சரஸ்வதி வேள்வி பங்கேற்க அழைப்பு
ADDED :2956 days ago
கோவை : ஒப்பணக்கார வீதியிலுள்ள அத்தி விநாயகர் கோவிலில், சரஸ்வதி நாம ஜெபவேள்வி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்விக் கடவுளாக கருதப்படும் சரஸ்வதி தேவியின் அருளை மாணவர்கள் பெற, ஆனைகட்டியிலுள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தால் இயக்கப்படும், ’தர்மரக்ஷனசமிதி’ சார்பில் தமிழகம் முழுவதும் சரஸ்வதி நாம ஜெபவேள்வி நவராத்திரி நாட்களில் நடத்தப்படுகிறது. கோவை, ஒப்பணக்கார வீதி, மில் ரோடு சந்திப்பிலுள்ள அத்திவிநாயகர் கோவிலில் நாளை காலை, 6:00 மணிக்கு வேள்வி துவங்குகிறது. அக்., 30 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 98430 55329, 98422 28538, 98435 92754 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.