உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பிரம்மோற்சவம் 23ல் துவக்கம்

திருமலையில் பிரம்மோற்சவம் 23ல் துவக்கம்

திருப்பதி: திருமலையில், வரும் செப்., 23 முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. திருமலையில் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும், 450 உற்சவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன; அவற்றில் முதன்மையானது, புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம். திருமலையில், வரும் செப்., 23 முதல், அக்., 1ம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் திருமலையில் நடக்கின்றன. பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும், காலை, இரவு நேரங்களில், பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி - பூதேவியுடன் மாடவீதியில் வலம் வருவார். அப்போது, கருவறையில் உள்ள ஏழுமலையானுக்கு ஆராதனைகள், நிவேதனங்கள் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !