உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாளய அமாவாசை பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

மகாளய அமாவாசை பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோத்தகிரி : கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோத்தகிரி பஜார் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், அமாவாசை நாட்களில் பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் மகாளய அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதல், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, சிறப்பு மலர் அலங்கார வழிபாடு நடந்தது. இந்த பூஜையில், பெண்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !