மஹா புஷ்கர திருவிழா: காவிரி ஆற்றில் ஆரத்தி
ADDED :2955 days ago
பவானி: பவானியில், காவிரி மஹா புஷ்கர திருவிழாவில், நேற்று இரவு காவிரி அன்னைக்கு ஆரத்தி நடந்தது காவிரி மஹா புஷ்கர திருவிழா நேற்று துவங்கியது. வரும், 24 வரை சங்கமேஸ்வரர் கோவில் கூடுதுறையில் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரத்தி நேற்று மாலை, 6:00 மணிக்கு தொடங்கியது. மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில், 18 பேர் கொண்ட குழுவினர் வேத மந்திரங்கள் ஓத, பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர், காவிரி அன்னைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், மஹா ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.