விழாவுக்காக ஓராண்டுக்கு பின் வெளியே வந்த பெருமாள் கோவில் தேர்
ADDED :2955 days ago
ஈரோடு: தேர்த்திருவிழாவுக்கு, தயார்படுத்தும் பணிக்காக, ஓராண்டுக்கு பின், பெருமாள் கோவில் தேர் நேற்று வெளியில் கொண்டு வரப்பட்டது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழா, வரும், 24ல் தொடங்குகிறது, அக்., 1ல், தேரோட்டம் நடக்கிறது. கடந்தாண்டு, தேர்த்திருவிழா நிறைவு பெற்றவுடன், கோவில் வளாகம் முன்பு தற்காலிக செட்டில், நிலை நிறுத்தப்பட்டது. தற்போது, திருவிழா தொடங்கவுள்ளதையடுத்து, தேரை சுத்தப்படுத்தி, தயார் செய்ய நேற்று தேர் நிலையில் இருந்து வெளியில் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கென, காலை சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள், திருவரங்கன் அடிகளார், அமைப்பினர், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர், வடகயிறு கட்டி, தேரை இழுத்து கோவில், ராஜகோபுரம் முன் நிறுத்தினர்.