நீண்ட ஆயுள் வேண்டி ஹோமம்: நாமக்கல்லில் 30ல் துவக்கம்
நாமக்கல்: ’நீண்ட ஆயுள் வேண்டி, நாமக்கல்லில் வரும், 30 முதல், ’மகா ம்ருத்யுஞ்சய ஹோமம்’ துவங்கி, 369 நாட்கள் நடக்கிறது’ என, ஜெயம் வெற்றி முரசு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நம் நாட்டில், அரசர்கள், பொதுமக்கள், தங்களுடைய வாழ்க்கையில் அவசிய தேவையை பூர்த்தி செய்து கொள்ள, பலவித ஹோமங்கள் செய்தனர். குழந்தை பாக்கியம் பெற புத்திரகாமேஷ்டியாகம், தடைபடும் திருமணங்கள் நடக்க சுயம்வர பார்வதி ஹோமம், குபேர சம்பத்துக்களுக்காக மகாலட்சுமி ஹோமம், நோய்தீர தன்வந்திரி ஹோமம், கல்விக்காக ஹயக்கிரீவர் ஹோமம். மேலும், ஆயுள் நீடிக்க ஆயுள் ஹோமம் செய்வதற்கு திருக்கடையூர் மற்றும் ராமேஸ்வரம் செல்வது வழக்கம். வசதி வாய்ப்பு இருந்தாலும், அங்கு செல்வதற்கு வாய்ப்பு சூழ்நிலை குறைவு. அவற்றை கருத்தில் கொண்டு, நீண்ட ஆயுள் வேண்டி, ’மகா ம்ருத்யுஞ்சய ஹோமம்’, வரும், 30 முதல், நாமக்கல், செல்வம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அடுத்த, 369 நாட்களுக்கும், காலை, 6:30 மணி முதல், 8:00 மணி வரை நடக்கிறது. ’அனைவரும் பங்கேற்று, நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ் பெறலாம். அவரவர் பிறந்த நாள் அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று, இந்த ?ஹாமத்தில் பங்கேற்கலாம்’ என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.