அவிநாசியில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா
ADDED :2953 days ago
திருப்பூர் : அவிநாசியில், ஸ்ரீ விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா மற்றும் சமுதாய ஒற்றுமை விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை, விஸ்வப்பிரம்ம மகா யாகம், ஸ்ரீ விஸ்வபிரம்மா, ஸ்ரீ காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, மகா தீபாராதனை, சுவாமி திருவீதி <உலா ஆகியவை நடந்தது. அவிநாசி விஸ்வகர்ம சமூக நல அறக்கட்டளை தலைவர் சண்முகம், கருணாம்பிகை சிற்ப கலைக்கூடம், மருதமுத்து, கவுரவ தலைவர் துரைசாமி, துணை தலைவர் வெங்கடாசலம், பொற்கொல்லர் நல சங்க தலைவர் துரைசாமி, செயலாளர் கார்த்திகேயன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.