ராஜராஜேஸ்வரி கோவிலில் மகா சண்டி யாகம்
ADDED :2953 days ago
திருப்பூர் : திருப்பூர், அம்மாபாளையம் ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. இங்கு, நவராத்திரி விழா, வரும், 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேற்று மாலை, மகா சண்டி யாகம், சங்கல்பத்துடன் துவங்கியது. சிவஸ்ரீ ஞானஸ்கந்த சிவாச்சாரியார் தலைமையில், யாக பூஜைகள் நடந்தன. இன்று முதல் சண்டியாகம், துர்க்க சப்த சதி ஹோமம், நிறை வேள்வி நடக்கிறது.