உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரில் 51 அடி மகா கணபதி சிலை

குருவாயூரில் 51 அடி மகா கணபதி சிலை

குருவாயூர் : கேரளா, திருச்சூர் மாவட்டம், குருவாயூரில், உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் யானைகளை, இங்குள்ள புன்னத்தூர் கோட்டையில் குருவாயூர் தேவஸ்வம் போர்டு பராமரித்து வருகிறது. கோவிலில் வரும் 6ம் தேதி, ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ள நிலையில், புன்னத்தூர் கோட்டையில், மிகப் பெரிய கணபதி சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா, அன்றைய தினம் நடக்கிறது. இச்சிலை 51 அடி உயரமும், 23 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.மேலும் இச்சிலை, 108 யானைகள் மீது அமர்ந்திருப்பது போல் வடிவமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !