உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்

திருவண்ணாமலையில் இன்று தேரோட்டம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில், இன்று மகா தேரோட்டம் நடக்கிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் காலை, மாலையில் தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று ஏழாம் திருவிழாவில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், 63 அடி உயரமுள்ள மகா ரதத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.மொத்தம் 60 டன் எடையளவு கொண்ட மகா ரதத்தை இழுத்துச் சென்று வீதி உலா வருவர். அதைத் தொடர்ந்து, ஆறாம் நாள் திருவிழாவான நேற்று, வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !