வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயிலில் நவராத்திரி இசை விழா
ADDED :2995 days ago
காரைக்குடி: கோட்டையூர் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா சென்னை சகானா சாம்ராஜ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. சென்னை விஜய்கணேஷின் வயலின், குருராகவேந்திரனின் மிருதங்கம், புதுகை சோலைமலையின் கடம் இடம் பெற்றது. விழா நாட்களில் பல்வேறு இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் சுப.துரைராஜ், செயலாளர் அய்க்கண், கணபதி அம்பலம் செய்திருந்தனர். அலங்கார வைபவத்தை சிவஸ்ரீசோமு குருக்கள் செய்தார்.